கடிதம்

நந்தினிமருதம் said...

கவிஞர் அனார் கவிதைகள் தமிழ்க் கவிதையில் அழுத்தமான பதிவுகளை ஏறபடுத்தி வருகின்றன . ஆரவாரமில்லாமல் ஒரு புதிய நெறிப்பாங்கு. உள்ளுறை தேர்விலும் சொல்லாடலிலும் அணுகு முறைகளிலும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இடைவெளி இல்லாமல் அவர் தொடர்ந்து எழுத வேண்டும்.

அவருக்கு வாழ்த்துக்கள்

நந்தினிமருதம்
நியூயார்க
2012- சூன் 25----------------------------------------------------------------------------------------------------------
றபியுஸ் said...

உன் மொழி அது ஒரு அழகான சித்ரவதை ...
போதையின் இருப்பு ...
உடல் கொதிப்புக்களுடையதும் மர்மங்களுடையதும் தீவு ...


முதன் முதலில் உன் கவிதைப் பிரதிகளை பார்த்தது ஒரு கோடையின் செம் மஞ்சல் ரோஜாக்களைப் போன்ற ஒரு பின்நேரம் தான் (ஒரு சஞ்சிகையில் இரண்டு கவிதைகள்).நேரம் வெப்பமாகவும், மெதுமையாகவும் இருந்தது. வாசிப்பதற்கு முன்னரான உன் கவிதைகளும் இருந்தது. நான் எப்போதும் பூத்துக் குலுங்கியதுமில்லை உதிர்ந்து போனதுமில்லை. தனிமை, ஏக்கம், அவஸ்தை, வலிகளெல்லாம் அப்போ எனக்கு பரிட்சயமில்லை.

உன் கவிதைகளை வாசித்த கணம்... நான் நீரால் செய்யப்பட்ட கண்ணாடி உடலாகி கீழே விழுந்து உடைந்து நொறுங்கிய கணம்... நான், என் மொழி, என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் தற்காலிகமாகவும் அன்நியமாகவும் உணர்ந்தேன். என்னை இனம் புரியாத நோய் தழுவியது. இரக்கமின்றி இரவுகள் நீண்டது. சுவாசிப்பதற்கு மிகவும் பிரயத்தனப்படவேண்டியிருந்தது. மிகவும் வலித்தது.

பறவைகள் வாழ்வியலை ஒத்த உன் கவிதைகள்... 'நான் பெண்' என்ற உன் குதூகலம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

றபியுஸ்
அக்கரைப்பற்று
whenwillucome@gmail.com

----------------------------------------------------------------------------------------------------------


பா. ​வெங்க​டேசன் said...


இரண்டு வருடங்களுக்குமுன் திடீ​ரென ஒரு மா​லையில் திலகபாமா ​தொ​லை​பேசியில் உங்களு​டைய ‘மாதந்​தோறும் இரத்தத்​தைக் கண்டு​கொண்டிருந்தாலும்’ (சரியான வரிகளும் த​லைப்பும் நி​னைவில்​லை. அலுவலகத்திலிருந்து இ​தை எழுதுவதால் சரிபார்க்க இயலவில்​லை) எனத் ​தொடங்கும் கவி​தை​யை பரவசத்துடன் வாசித்துக் காட்டியதிலிருந்து உங்கள் கவி​தைக​ளைத் ​தொடர ​வேண்டு​மென்கிற ஆவல் இருந்தது. எனினும் ஏ​னோ பருவ இதழ்களில் அவ்வப்​போது வாசிப்ப​தைத் தவிர ​தொகுப்பில் வாசிக்கச் சந்தர்ப்பம் கி​டைக்கவில்​லை. கல்குதி​ரை இதழுக்காகக் ​கோணங்கியுடன் பேசிக்​கொண்டிருந்த ஒரு இரவில் உங்கள் கவி​தை​யைப்பற்றிப் ​பேசிக்​கொண்டிருந்ததும் இந்த ஆவ​லை அதிகப்படுத்திக்​கொண்டிருந்தது. பிறகு, இப்​போது, இலங்​கைப் பயணத்திற்கான திட்டமிடுதலில் அதன் ஒரு பகுதியாக உங்கள் கவி​தைக​ளையும் வாசித்துவிடுவ​தை மகிழ்ச்சியாக​வே கட்டாயமாக்கிக்​கொண்​டேன். இயல்பாகத் தன்​னை வந்த​டையும் மொழிக்கு முந்தின அனுபவத்​தை (தவிர்க்கவியலாமலே​யே) ​மொழியால் கட்ட​மைத்துக் கவி​தையாக உருவாக்குவது ஒரு விதம். மொழியைக் ​கைப்பற்றி அதன் லாவகத்​தைப் பயின்று க​டைந்து அனுபவத்​தைப் பிரக்​ஞையிழப்பின்றி​யே உருவாக்குவது இன்​னொரு வ​கை. இரண்டு​மே வாசகருக்கு நல்ல கவிதானுபத்​தைத் தர வல்ல​வையாக இருக்க முடியும். உங்களு​டைய​வற்​றை இரண்டாவது வ​கையான வெளிப்பாடாக என்னால் காண முடிந்தது. அந்த வ​கைக்​கே உரியதான பலத்துடனும் பலவீனங்களுடனும் அ​வை அழகான கவி​தைகள். எனக்குக் கவி​தை முகம் மற்றும் உடல் பச்​சை வானம் இரண்டு​தொகுப்புகளிலும் ​சேர்த்து ஒரு பத்துப் பதி​னைந்து கவி​தைகளாவது என்​னை ​வெளி​யேற விடாமல், ஒரு ப​ழைய தி​ரைப்படப் பாட​லைப்​போலத் திருமபத் திரும்ப முணுமுணுத்துக்​கொண்டிருக்கும்படி, தன்வசம் தக்க ​வைத்துக்​கொள்ளும் வசீகரமும் துயரமும் ​கொண்டிருந்தன. நி​றைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பா. ​வெங்க​டேசன்
தமிழ்நாடு
​bavenkatesan@yahoo.com
06.02.2012
----------------------------------------------------------------------------------------------------------

அப்துல் மனாஃப் said....

'ப்ளேட்' கத மிக அரும. என்ட உம்மாக்கு கன்னியாக்குமரி, வாப்பாக்கு திருநெல்வேலி ஜில்லா. மொத மொறையா ஈழத்து தமிழுல படிக்கிறேன். எனக்குள்ள அவ்வளவு மகிழ்ச்சி! எல்லா வார்த்தைகளும் புரிஞ்சன. ஒவ்வொரு வார்த்தையயும் ரசிச்சி படிச்சன். வாழ்த்துக்கள் தோழி. பாரக்கலாஹூ லக்கி. 

அப்துல் மனாஃப் 
தமிழ்நாடு
30.01.2012 

----------------------------------------------------------------------------------------------------------

எஸ்.பாயிஸா அலி said...

அனார் குறிஞ்சியின் தலைவியாய் அந்நிலப்பெண்ணின் ஓர்மந்தனை வேறொரு கோணத்தில் அணுகிய கவிதையொன்றை வாசித்தபோது அடைந்ததைப் போன்றே முதன்முதலில் காலம் சஞ்சிகையில் இக்கவிதையை (சுலைஹா) படித்தபோது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருசேர உணர்ந்தேன். கலாசாரத்தோடு ஒன்றிய வரலாற்றுச் சம்பவமொன்றைப் ‘பெண்ணாக’ நின்று நோக்கியதோடு மட்டுமன்றி சுலைஹாவை மீள்கட்டமைப்பும் செய்திருக்கிறார். அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள் நான். அனாரின் இந்த அசாத்தியத் துணிச்சலை என்னவென்பது? உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள். ஆமாம்! நீர்மயமாகும் கூறுகள் ஒன்றிக்கிடக்கும் உப்புக் குவியலுக்குள் ஈரலிப்புக்கு என்றுமே பஞ்சமில்லைதானே. எவரும் விரும்பிரசிக்கத்தக்க அழகான வரிகள். பெரிதும், மரபும் துறைசார்ந்துமேயிருந்த என் வாசிப்பை கலைசார்ந்ததுமாய் விரிகையுறச் செய்ததில் அனாரின் கூர்மையும் வசீகரமும் செறிந்த கவிதைமொழிக்கும் பெரும்பங்குண்டு. அனாரின் அரூபவண்ணத்துப்பூச்சிகள் நவீனப் பெருவெளி தாண்டியும் மெதுமெதுவாய் சிறகசைப்பதைப் பெரும் பிரமிப்போடு நோக்கியபடியேதான் இதைப் பதிவிடுகிறேன். 

எஸ்.பாயிஸா அலி
கிண்ணியா
21.01.2012

----------------------------------------------------------------------------------------------------------

மர்ஜியா பேகம் said...

அனாரின் கவிதைகளைப் படிக்கும்போது ஏதோ ஒன்று என்னைப் பிடித்திருப்பது போல் தோன்றுகிறது. என்னவென்று எனக்குப் புரிவில்லை. அனாரின் கவிதையில் அழகியல் ஆழப்புதையுண்டு கிடக்கிறது. இது மட்டுமா.... இயற்கையும் நீயும் இரட்டையர் போல் இருவரும் பேசும் மொழியை தொகுத்திருக்கிறாய் கவிவரியாய்.

இயற்கையின் இதயத்தில் நீ இடம்பிடித்துவிட்டாய். உன் கவிதையில் என்னை சிறைப்பிடிக்கவைத்த மாயம் தான் என்ன ? எனக்கு உன் முகம் தெரியாது. இருந்தும் உன் விம்பங்கள் விழுகின்ற “எனக்குக் கவிதை முகம்“ மட்டுமே என்னில் பத்திரமாய் பொத்தி வைத்திருக்கிறேன். 

கவிதை படிப்பதற்காய் அதிகநேரம் ஒதுக்குவதில்லை. இப்போது சாதாரணமாக எல்லோரும் காதல் கவி எழுதுவது வழக்கு. தலைப்புகள் கண்டாலே தலையிடி வந்துவிடும். அது என்னவோ தெரியவில்லை உனது கவிதைகளைப் படிக்கும்போது நேரம் போனது கூடத்தெரியவில்லை. தணல் நதி, காதலைக் கொல்லும் தேவை, மேலும் சில இரத்தக் குறிப்புகள்.... என நீ கவிதைக்கு கொடுத்திருக்கும் தலைப்புகள் வினோதமானது. 

இப்போது ஈழத்துக் கவிஞன் மஹாகவி கூறுவது ஞாபகம் வந்தது. இன்னவைதான் கவி எழுத ஏற்ற பொருள்...... ஏன் தெரியுமா ? உன் கவிதைகளில் புதுமையைத் தேட விட்டிருப்பது போல் ஓர் உணர்வு என்னுள் ஊசலாடியது. ஆழமான கருத்துப்பரிமாற்றம், வித்தியாசமான அணுகுமுறை, புதுமை புனைதல் என இவ்வாறெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது. 

இதயம் இரைமீட்டுகிறது எப்போதும் உன் கவிதைகளை. அனேகமாக இதற்குச் சொந்தக்காரன் இரவுதான். 

மு.இ. மர்ஜியா பேகம் 
கலைப்பிரிவு 
தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்

----------------------------------------------------------------------------------------------------------

எஸ்.எல்.எம். ஹனீபா said...

ஒரு நிறமற்ற, அணிகளற்ற, மிகத் துல்லியமான தெளிவுடைய பிரகடனங்களைத் தூக்கிப் பிடிக்காத, தான் கண்டும் கேட்டும் அனுபவித்தும் மோகித்த இந்த வாழ்வின் புறவுலக யதார்த்தத்தை கூட்டாமல் குறைக்காமல் ஒரு கிளாசிக்கல் நடையில் உள்ளதுள்ளபடி படிமங்களை வரையறுத்து பதிவு செய்வதே அனாரின் கவிதைகளில் நிகழும் பொருள்மிக்க சாதனை என்பேன். 'கலை என்பது மிகப் பெரிய போட்டி சிருஷ்டி' அனாரின் ஒட்டுமொத்த கவிதைகளும் நமக்குச் சொல்லும் சேதியும் இதுதான்.

'இதமி' இதமான சொல். உங்கள் வலைப்பூ அழகாக வந்துள்ளது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். கணினிக்குள் இறங்குவதென்பது ஏனோ தயக்கமாகவே உள்ளது. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன்தான் இதற்குள் உலா வருகிறோமோ? என்றில்லாமல், உங்களிதம் பார்வையாளனுக்கு பரவசத்தையும் விடுதலையையும் வழங்கட்டும். வாழ்த்துக்கள். 

எஸ்.எல்.எம். ஹனீபா
30.09.2011


----------------------------------------------------------------------------------------------------------

ஜமாலன் said ...

“மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது.” கவிஞர் அனாரின் இக்கருத்து சமீபத்திய தமிழ்க்கவிதைகள் பற்றிய ஒரு முக்கிய அவதானமாகும். கவிதைகள் பற்றிய உரையாடலில் கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியக் கருத்தாக்கம் என்றே சொல்லலாம். புதுக்கவிதை மற்றும் நவீனகவிதை என்கிற பிரிவினைபற்றி கடந்த ஓராண்டாக சிந்திப்பதும் அதனை வரையறுப்பதிலும், சிந்தித்தும் வாசித்தும் வரும் எனக்கு இந்த நேர்காணல் ஒரு படைப்பாளியினை புரிந்துகொள்ள உதவக்கூடியது.
முஜிபின் கட்டுரையும் நன்றாக வந்துள்ளது.

ஜமாலன்
சவூதி அரேபியா
10 10:05 AM

----------------------------------------------------------------------------------------------------------

No comments: